Jump to Content

பொதுவான கேள்விகள்

Family Link குறித்துக் கேட்கப்படும் சில பொதுவான கேள்விகளுக்குப் பதில்களைச் சேகரித்துள்ளோம். ஏற்கெனவே ஆப்ஸைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் எனில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எங்கள் உதவி மையத்திற்குச் சென்று மேலும் தகவல்களை அறியலாம்.

இது எப்படிச் செயல்படுகிறது?

Family Link எப்படிச் செயல்படுகிறது?

பெற்றோர் தங்களது பிள்ளையோ டீன் ஏஜரோ Android, ChromeOS ஆகிய சாதனங்களைப் பயன்படுத்தும்போது அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் ஆன்லைனில் அவரது பாதுகாப்பை உறுதிசெய்யவும் Google வழங்கும் Family Link உதவும்.

முதலில் பிள்ளை/டீன் ஏஜரிடம் இணக்கமான சாதனம் இருக்க வேண்டும் (Family Link எந்தெந்தச் சாதனங்களில் வேலை செய்யும் என்பதைப் பாருங்கள்). அதன்பிறகு பிள்ளை/டீன் ஏஜரைச் சாதனத்தில் உள்நுழையச் செய்யவும். பிள்ளை/டீன் ஏஜர் ஏற்கெனவே Family Link மூலம் கண்காணிக்கப்படுபவராக இருந்தால் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்க இந்த உள்நுழைவு அவருக்கு உதவும். டீன் ஏஜரை Family Link மூலம் ஏற்கெனவே கண்காணிக்கவில்லை எனில் பெற்றோரும் Android அமைப்புகளில் இருந்து Family Linkகைச் சேர்க்க முடியும்.

13 வயதிற்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட) பிள்ளைக்கு Google கணக்கைப் பெற்றோராலும் உருவாக்க முடியும். கணக்கை உருவாக்கியதும் பிள்ளைகள் அவர்களது புதிய கணக்கைப் பயன்படுத்தி சாதனத்தில் உள்நுழைய முடியும்.

கணக்குகள் இணைக்கப்பட்டதும் Family Linkகைப் பயன்படுத்தி பிள்ளையின் சாதனப் பயன்பாட்டு நேரத்தைக் கண்காணித்தல், அவரது வயதிற்கு ஏற்ற உள்ளடக்கத்தைப் பரிந்துரைத்தல் போன்றவற்றைப் பெற்றோரால் செய்ய முடியும்.

பிள்ளையின் சாதனம் மற்றும் Google கணக்கை அமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?

உங்கள் பிள்ளையின் Google கணக்கையும் Android சாதனத்தையும் அமைக்க சுமார் 15 நிமிடங்கள் தேவைப்படும்.

கணக்குகள்

எனது பிள்ளை தனது Google கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது விளம்பரங்கள் காட்டப்படுமா?

Google சேவைகளில் விளம்பரங்கள் காட்டப்படும் என்பதால் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது உங்கள் பிள்ளை விளம்பரங்களைப் பார்க்கக்கூடும். எனினும் பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்கள் அவர்களுக்குக் காட்டப்படாது. பிள்ளை ஆப்ஸில் விளம்பரங்களைப் பார்க்கும்போது அதைத் தெரிந்துகொள்வதற்கான கருவிகள் உங்களுக்குக் கிடைக்கும்.

பள்ளி அல்லது பணிக் கணக்கைப் பயன்படுத்தி எனது குடும்பத்தை நிர்வகிக்கலாமா?

இல்லை. பணியிடம் அல்லது பள்ளியில் பெற்ற கணக்குகளைக் கொண்டு குடும்பக் குழுவை நிர்வகிக்கவோ Family Link மூலம் கண்காணிக்கவோ முடியாது. Gmail கணக்கு போன்ற தனிப்பட்ட Google கணக்கை Family Link உடன் பயன்படுத்தலாம்.

கண்காணிப்படும் சாதனங்களில் சிறுவர்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகளைச் சேர்க்க முடியுமா?

பொதுவாக இல்லை. கண்காணிக்கப்படும் தனிப்பட்ட Google கணக்கைத் தவிர Google Workspace for Education கணக்கை மட்டுமே சிறுவர்களால் சேர்க்க முடியும். தயாரிப்பின் முக்கியச் செயல்பாடுகளை நிர்வகிக்க இந்தக் கட்டுப்பாடு எங்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, சாதனத்தில் மற்றொரு கணக்கு இருந்தால் சிறுவர்கள் அந்தக் கணக்கிற்கு மாறி அதன் மூலம் பெற்றோரின் அனுமதி இல்லாமல் Playயில் இருந்து ஆப்ஸைப் பதிவிறக்கலாம்.

எனது பிள்ளை 13 வயதை (அல்லது எங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதை) அடையும்போது என்ன ஆகும்?

உங்கள் பிள்ளை 13 வயதை (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய ஒப்புதல் அளிப்பதற்கான வயதை) எட்டும்போது கண்காணிக்கப்படும் டீன் ஏஜர் கணக்காகத் தனது Google கணக்கை அவர் மாற்றலாம். இந்தப் புதுப்பிப்பு உங்கள் கண்காணிப்பைப் பாதிக்காது. உங்கள் பிள்ளையின் கண்காணிக்கப்படும் சாதனங்களுக்கான பெற்றோர் கட்டுப்பாடுகளையும் அமைப்புகளையும் நீங்கள் Family Link ஆப்ஸ் மூலம் தொடர்ந்து நிர்வகிக்க முடியும்.

எல்லாம் தயாராக உள்ளதா? ஆப்ஸைப் பெறுக.

உங்கள் பிள்ளையின் சாதன உபயோகத்தைக் கண்காணிக்க, உங்கள் சாதனத்தில் Family Linkகைப் பதிவிறக்கவும்.
உங்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லையா?
ஆன்லைன் கண்காணிப்பை அமைக்கலாம்.