6-8 வயது
9-12 வயது
13-17 வயது

Googleளில் உங்கள் தனியுரிமை குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா?

சரியான பக்கத்திற்கு வந்துள்ளீர்கள்! குழந்தைகள் பெரும்பாலும் கேட்கும் கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றைப் படியுங்கள். அதாவது Google தயாரிப்புகள் & சேவைகள் தொடர்பாக பெற்றோர் எப்படி உதவ முடியும், என்னென்ன தகவல்களை Google பயன்படுத்துகிறது போன்றவை.

பெற்றோரின் கவனத்திற்கு: 13 வயது அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளின், Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்குகளுக்கு மட்டுமே இந்தத் தகவல்கள் பொருந்தும். மேலும் விவரங்களுக்கு, எங்கள் தனியுரிமை அறிக்கையையும் தனியுரிமைக் கொள்கையையும் பார்க்கவும்.

எனது கணக்கை யார் நிர்வகிக்கிறார்கள்?

உங்கள் Google கணக்கை உங்கள் பெற்றோர் நிர்வகிக்கின்றனர். Family Link ஆப்ஸைப் பயன்படுத்தி அதை அவர்கள் நிர்வகிக்கலாம். தகுந்த வயதை அடைந்ததும் உங்கள் கணக்கை நீங்களே நிர்வகிக்கலாம்.

பெற்றோர் இவற்றைச் செய்யலாம்:

  • உங்கள் கணக்கில் உள்நுழையலாம், அதன் கடவுச்சொல்லை மாற்றலாம், கணக்கை நீக்கலாம்.
  • ஃபோன், டேப்லெட் ஆகியவற்றைப் பூட்டலாம்.
  • ஃபோன், டேப்லெட் ஆகியவை எங்கிருக்கிறது எனப் பார்க்கலாம்.
  • நீங்கள் எந்த ஆப்ஸைப் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்யலாம்.
  • ஆப்ஸை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் எனப் பார்க்கலாம்.
  • Google ஆப்ஸ் சிலவற்றில் (Google Search, YouTube, Google Play போன்றவை) நீங்கள் பார்க்கக்கூடியவற்றை மாற்றலாம்.
  • உங்கள் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைத் தேர்வுசெய்யலாம். (Googleளில் என்ன செய்கிறீர்கள் எனும் தகவலை இந்த அமைப்புகள் சேமிக்கின்றன.)
  • உங்கள் ஆப்ஸுக்கான அமைப்புகளையும் அனுமதிகளையும் தேர்வுசெய்யலாம்.
  • உங்கள் கணக்கிற்கான பெயர், பிறந்தநாள் மற்றும் பிற தகவல்களைத் தேர்வுசெய்யலாம்.
  • Google Play போன்ற சில Google தயாரிப்புகளில் நீங்கள் என்ன பதிவிறக்கலாம் வாங்கலாம் என்பதைத் தேர்வுசெய்யலாம்.

எனது தகவல்களை Google எப்படி எதற்காகப் பயன்படுத்துகிறது?

நீங்களோ உங்கள் பெற்றோரோ வழங்கும் தகவல்களை (உங்கள் பெயர், பிறந்தநாள் போன்றவை) நாங்கள் சேமிக்கலாம். ஆப்ஸையும் தளங்களையும் நீங்கள் பயன்படுத்தும்போதும் தகவல்களைச் சேமிக்கிறோம். இந்தத் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். Google ஆப்ஸையும் தளங்களையும் உங்களுக்கு இன்னும் பயனுள்ளவையாக உருவாக்குவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம்.

உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடிய விதம் குறித்து உங்கள் பெற்றோருடன் சேர்ந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்:

  • எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் செயல்பட வைக்க: எடுத்துக்காட்டாக, Google Searchசில் "நாய்க்குட்டிகள்" எனத் தேடினால் நாய்க்குட்டிகள் குறித்த விஷயங்களை உங்களுக்குக் காட்ட அந்தத் தகவலைப் பயன்படுத்துவோம்.
  • எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் இன்னும் சிறப்பாக்க: எடுத்துக்காட்டாக, ஏதாவது சரியாகச் செயல்படவில்லை எனில் தகவலைப் பயன்படுத்தி அதைச் சரிசெய்வோம்.
  • Google, எங்கள் பயனர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க: பயனர்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம்.
  • புதிய ஆப்ஸையும் தளங்களையும் உருவாக்க: புதிய Google தயாரிப்புகளை உருவாக்கும் யோசனைகளைப் பெற, தற்போதைய ஆப்ஸையும் தளங்களையும் பயனர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்கிறோம்.
  • நீங்கள் விரும்பக்கூடிய விஷயங்களைக் காட்ட: எடுத்துக்காட்டாக, YouTube Kidsஸில் விலங்குகள் குறித்த வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் எனில் அந்த வகை வீடியோக்களை அதிகமாக நாங்கள் காட்டக்கூடும்.
  • இதன் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட: நீங்கள் பார்க்கும் தளம் போன்ற தகவல்கள்.
  • உங்களுடன் தொடர்புகொள்ள: எடுத்துக்காட்டாக, மெசேஜ் அனுப்ப உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம். உங்களுக்குத் தெரியாதவர் அனுப்பியிருக்கும் மெசேஜ்களைத் திறப்பதற்கு முன் எப்போதும் பெற்றோரைக் கேட்கவும்.

Google எதைச் சேமிக்கலாம் என்பதை நான் தேர்வு செய்யலாமா?

ஆம். உங்களைப் பற்றி என்னென்ன தகவல்களைச் சேமிக்கிறோம் என்பதில் சிலவற்றை நீங்கள் மாற்றலாம். ஆனால் 'செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்' போன்ற சில தனியுரிமை அமைப்புகளை நீங்கள் மாற்றினால் அதுகுறித்து பெற்றோருக்குத் தெரிவிப்போம். அமைப்புகளை மாற்ற அவர்களும் உங்களுக்கு உதவலாம்.

உங்களையும் உங்கள் Google கணக்கையும் பற்றிய தகவல்கள் சிலவற்றை நீங்களும் உங்கள் பெற்றோரும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.

Google எனது தனிப்பட்ட தகவல்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுமா?

சில காரணங்களுக்காக Googleளுக்கு வெளியே ‘உங்கள் பெயர்’ போன்ற தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிரக்கூடும். அவ்வாறு பகிர்ந்தால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இவர்களுடனும் இந்தச் சூழல்களிலும் சில தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிரக்கூடும்:

  • Googleளில் உள்ள உங்கள் பெற்றோர் & குடும்பக் குழு
  • எங்களுடன் பணிபுரியும் நிறுவனங்கள்
  • பெற்றோர் அனுமதி வழங்கினால்
  • சட்டப்பூர்வக் காரணங்களுக்குத் தேவைப்பட்டால்

நான் ஆன்லைனில் பகிர்வதை வேறு யார் பார்க்கலாம்?

மின்னஞ்சல்கள், படங்கள் என ஆன்லைனில் நீங்கள் பகிரும் அனைத்தையும் பலர் பார்க்கக்கூடும். நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே பகிரவும். உங்களுக்குச் சந்தேகம் இருப்பின் பெற்றோரிடமோ குடும்ப உறுப்பினர்களிடமோ கேட்கவும்.

மேலும் அறிந்துகொள்ள வேண்டுமா? எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் படிப்பதற்கு உதவுமாறு உங்கள் பெற்றோரிடம் கேட்கவும்.

Googleளில் உங்கள் தனியுரிமை குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா?

சரியான பக்கத்திற்கு வந்துள்ளீர்கள்! எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் நீங்கள் பயன்படுத்தும்போது Google எப்படித் தகவல்களைச் சேகரிக்கிறது, அவற்றைப் பயன்படுத்துகிறது என இங்கே அறிந்துகொள்ளலாம். உங்கள் Google கணக்கையும் சாதனங்களையும் நிர்வகிக்கப் பெற்றோர் உங்களுக்கு எப்படி உதவலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

பெற்றோரின் கவனத்திற்கு: 13 வயது அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளின், Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்குகளுக்கு மட்டுமே இந்தத் தகவல்கள் பொருந்தும். மேலும் விவரங்களுக்கு, எங்கள் தனியுரிமை அறிக்கையையும் தனியுரிமைக் கொள்கையையும் பார்க்கவும்.

எனது கணக்கை யார் நிர்வகிக்கிறார்கள்?

உங்கள் Google கணக்கைத் தற்போது உங்கள் பெற்றோர் நிர்வகிக்கிறார். கணக்கை நீங்கள் நிர்வகிக்கப் பொருந்தும் வயது வரும் வரையில் Family Link ஆப்ஸைப் பயன்படுத்தி அதை அவர்கள் நிர்வகிக்கலாம்.

பெற்றோர் இவற்றைச் செய்யலாம்:

  • உங்கள் கணக்கில் உள்நுழையலாம், அதன் கடவுச்சொல்லை மாற்றலாம், கணக்கை நீக்கலாம்.
  • ஃபோன்கள், டேப்லெட்கள் போன்ற சாதனங்களை எப்போது, எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான வரம்புகளை அமைக்கலாம்.
  • ஃபோன், டேப்லெட் ஆகியவை எங்கிருக்கிறது எனப் பார்க்கலாம்.
  • நீங்கள் எந்தெந்த ஆப்ஸைப் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • ஆப்ஸை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் எனப் பார்க்கலாம்.
  • சில Google ஆப்ஸிலும் தளங்களிலும் (Google Search, YouTube, Google Play போன்றவை) உள்ளடக்க அமைப்புகளை நிர்வகிக்கலாம். என்ன பார்க்க வேண்டும் என்பதை இந்த அமைப்புகள் மூலம் மாற்றலாம்.
  • உங்கள் கணக்கிற்கான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை (YouTube செயல்பாடுகள் போன்றவை) நிர்வகிக்கலாம். இந்தக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்க விடாமல் உங்களைத் தடுப்பதும் இதில் அடங்கும்.
  • ஃபோன், டேப்லெட் ஆகியவற்றில் மைக்ரோஃபோன், கேமரா, தொடர்புகள் ஆகியவற்றை ஆப்ஸ் பயன்படுத்துவதற்கான அனுமதிகளைச் சரிபார்க்கலாம்.
  • உங்கள் கணக்கைப் பற்றிய தகவல்களைப் (பெயர், பாலினம், பிறந்த தேதி போன்றவை) பார்க்கலாம் மாற்றலாம் நீக்கலாம்.
  • சில Google ஆப்ஸிலும் தளங்களிலும் (Google Play போன்றவை) பதிவிறக்குவதற்கும் பர்ச்சேஸ் செய்வதற்கும் உங்களை அனுமதிக்கலாம்.

எனது தகவல்களை Google எப்படி எதற்காகப் பயன்படுத்துகிறது?

பெரும்பாலான தளங்கள் மற்றும் ஆப்ஸைப் போன்றே நீங்களோ பெற்றோரோ வழங்கும் தகவலைச் சேகரிக்கிறோம் (உங்கள் பெயர், பிறந்த தேதி போன்றவை). அத்துடன் எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் நீங்கள் பயன்படுத்தும்போதும் தகவலைச் சேகரிக்கிறோம். இந்தத் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்கள் தயாரிப்புகளை உங்களுக்கு அதிகப் பயனுள்ளதாக்குவது போன்ற விஷயங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, பின்வருவனவற்றைச் செய்ய தரவைச் சேகரிக்கிறோம்:

  • எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் செயல்பட வைக்க: எடுத்துக்காட்டாக, Google Searchசில் "விளையாட்டு" எனத் தேடினால் விளையாட்டு குறித்த விஷயங்களை உங்களுக்குக் காட்ட அந்தத் தகவலைப் பயன்படுத்துவோம்.
  • எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் இன்னும் சிறப்பாக்க: எடுத்துக்காட்டாக, ஏதாவது சரியாகச் செயல்படவில்லை எனில் தகவலைப் பயன்படுத்தி அதைச் சரிசெய்வோம்.
  • Google, எங்கள் பயனர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க: பயனர்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க (மோசடியைக் கண்டறிந்து தடுப்பது போன்றவை) நாங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம்.
  • புதிய ஆப்ஸையும் தளங்களையும் உருவாக்க: புதிய Google தயாரிப்புகளை உருவாக்கும் யோசனைகளைப் பெற, தற்போதைய ஆப்ஸையும் தளங்களையும் பயனர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்கிறோம்.
  • உங்களுக்காகத் தகவலைப் பிரத்தியேகமாக்க: நீங்கள் விரும்பக்கூடியவற்றைக் காட்ட எங்களுக்கு உதவும். எடுத்துக்காட்டாக, YouTube Kidsஸில் விலங்குகள் குறித்த வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் எனில் அந்த வகை வீடியோக்களை அதிகமாக நாங்கள் பரிந்துரைக்கக்கூடும்.
  • இதன் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட: நீங்கள் பார்க்கும் தளம் போன்ற தகவல்கள்.
  • உங்களைத் தொடர்புகொள்ள: எடுத்துக்காட்டாக, பாதுகாப்புச் சிக்கல் இருப்பதை நாங்கள் கண்டறிந்தால் அது குறித்த அறிவிப்பை அனுப்ப உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம். உங்களுக்குத் தெரியாதவர் அனுப்பியிருக்கும் மெசேஜ்களைத் திறப்பதற்கு முன் எப்போதும் பெற்றோரைக் கேட்கவும்.

Google எதைச் சேமிக்கலாம் என்பதை நான் தேர்வு செய்யலாமா?

ஆம். உங்களைப் பற்றி என்னென்ன தகவல்களைச் சேமிக்கிறோம் என்பதில் சிலவற்றை நீங்கள் மாற்றலாம். உதாரணமாக, உங்கள் 'YouTube செயல்பாடுகளை' உங்கள் Google கணக்கில் சேமிக்க வேண்டாம் எனில் அதை முடக்கிக்கொள்ளலாம். 'செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்' போன்ற சில தனியுரிமை அமைப்புகளை நீங்கள் மாற்றினால் அதுகுறித்து பெற்றோருக்குத் தெரிவிப்போம். அமைப்புகளை மாற்ற அவர்களும் உங்களுக்கு உதவலாம்.

உங்களையும் உங்கள் Google கணக்கையும் பற்றிய தகவல்கள் சிலவற்றை நீங்களும் உங்கள் பெற்றோரும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.

Google எனது தனிப்பட்ட தகவல்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுமா?

Googleளைத் தவிர்த்து வேறு இடங்களில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிரக்கூடும் என்பதற்குச் சில காரணங்கள் உள்ளன. இந்தத் தகவல்களைப் பகிர்ந்தால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இவர்களுடனும் இந்தச் சூழல்களிலும் சில தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிரக்கூடும்:

  • Googleளில் உள்ள உங்கள் பெற்றோர் & குடும்பக் குழு
  • எங்களுடன் பணிபுரியும் நிறுவனங்கள்
  • பெற்றோர் அனுமதி வழங்கினால்
  • சட்டப்பூர்வக் காரணங்களுக்குத் தேவைப்பட்டால்

நான் ஆன்லைனில் பகிர்வதை வேறு யார் பார்க்கலாம்?

மின்னஞ்சல்கள், படங்கள் என ஆன்லைனில் நீங்கள் பகிரும் அனைத்தையும் பலர் பார்க்கக்கூடும். ஆன்லைனில் ஒருமுறை பகிர்ந்துவிட்டால் அதை அகற்றுவது கடினமாக இருக்கும். நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே பகிரவும். உங்களுக்குச் சந்தேகம் இருப்பின் பெற்றோரிடமோ குடும்ப உறுப்பினர்களிடமோ கேட்கவும்.

மேலும் அறிந்துகொள்ள வேண்டுமா? எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் படிப்பதற்கு உதவுமாறு உங்கள் பெற்றோரிடம் கேட்கவும்.

Googleளில் உங்கள் தனியுரிமை குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா?

எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் நீங்கள் பயன்படுத்தும்போது Google எப்படித் தகவல்களைச் சேகரிக்கிறது, அவற்றைப் பயன்படுத்துகிறது என இங்கே அறிந்துகொள்ளலாம். உங்கள் Google கணக்கையும் சாதனங்களையும் நிர்வகிக்கப் பெற்றோர் உங்களுக்கு எப்படி உதவலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

தங்கள் கணக்கைத் தாங்களே நிர்வகிப்பதற்கான குறைந்தபட்ச வயதை அடையாத பிள்ளைகள் மற்றும் டீன் ஏஜர்களின், Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்குகளுக்கு மட்டுமே இந்தத் தகவல்கள் பொருந்தும். மேலும் தகவல்களுக்கு, எங்கள் தனியுரிமை அறிக்கையையும் தனியுரிமைக் கொள்கையையும் பார்க்கவும்.

என் கணக்கை நிர்வகிக்கப் பெற்றோர் உதவலாமா?

உங்கள் Google கணக்கின் அம்சங்களை நிர்வகிக்க உதவ Family Link ஆப்ஸை உங்கள் பெற்றோர் பயன்படுத்தலாம். உங்கள் சாதனத்தைப் பொறுத்து அவர்கள் இவற்றைச் செய்யலாம்:

  • உங்கள் கணக்கில் உள்நுழையலாம், அதன் கடவுச்சொல்லை மாற்றலாம், கணக்கை நீக்கலாம்.
  • சாதனங்களை எப்போது, எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான வரம்புகளை அமைக்கலாம்.
  • உள்நுழைந்துள்ள, செயலில் உள்ள சாதனங்களின் இருப்பிடத்தைப் பார்க்கலாம்.
  • உங்கள் ஆப்ஸை நிர்வகிக்கலாம் அவற்றை எந்த அளவிற்குப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்க்கலாம்.
  • சில Google ஆப்ஸிலும் தளங்களிலும் (Google Search, YouTube, Google Play போன்றவை) உள்ளடக்க அமைப்புகளை நிர்வகிக்கலாம். என்ன பார்க்க வேண்டும் என்பதை இந்த அமைப்புகள் மூலம் மாற்றலாம்.
  • உங்கள் கணக்கிற்கான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை (YouTube செயல்பாடுகள் போன்றவை) நிர்வகிக்கலாம். இந்தக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்க விடாமல் உங்களைத் தடுப்பதும் இதில் அடங்கும்.
  • சாதனங்களில் மைக்ரோஃபோன், கேமரா, தொடர்புகள் ஆகியவற்றை ஆப்ஸ் பயன்படுத்துவதற்கான அனுமதிகளைச் சரிபார்க்கலாம்.
  • உங்கள் கணக்கைப் பற்றிய தகவல்களைப் (பெயர், பாலினம், பிறந்த தேதி போன்றவை) பார்க்கலாம் மாற்றலாம் நீக்கலாம்.
  • சில Google ஆப்ஸிலும் தளங்களிலும் (Google Play போன்றவை) பதிவிறக்குவதற்கும் பர்ச்சேஸ் செய்வதற்கும் உங்களை அனுமதிக்கலாம்.

எனது தகவல்களை Google எப்படி எதற்காகச் சேகரித்துப் பயன்படுத்துகிறது?

பெரும்பாலான தளங்கள் மற்றும் ஆப்ஸைப் போன்றே நீங்களோ பெற்றோரோ வழங்கும் தகவலைச் சேகரிக்கிறோம் (உங்கள் பெயர், பிறந்த தேதி போன்றவை). அத்துடன் எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் நீங்கள் பயன்படுத்தும்போதும் தகவலைச் சேகரிக்கிறோம். இந்தத் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்கள் தயாரிப்புகளை உங்களுக்கு அதிகப் பயனுள்ளதாக்குவது போன்ற விஷயங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, பின்வருவனவற்றைச் செய்ய தரவைச் சேகரிக்கிறோம்:

  • Google, எங்கள் பயனர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க: பயனர்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க (மோசடியைக் கண்டறிந்து தடுப்பது போன்றவை) நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம்.
  • எங்கள் சேவைகளை வழங்க: எங்கள் சேவைகளை வழங்க (முடிவுகளைத் தருவதற்காக உங்கள் வினவல்களைச் செயலாக்குவது போன்றவை) நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம்.
  • எங்கள் சேவைகளைப் பராமரித்து மேம்படுத்த: எடுத்துக்காட்டாக, எப்போதெல்லாம எங்கள் தயாரிப்புகள் எதிர்பார்த்ததுபோல் வேலைசெய்யாமல் போகின்றன என்பதைக் கண்காணிக்கலாம். மேலும் எந்தெந்தத் தேடல் வார்த்தைகள் தொடர்ந்து அதிக முறை எழுத்துப் பிழையுடன் டைப் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது எங்கள் சேவைகள் முழுதும் ‘எழுத்துப் பிழை சரிபார்ப்பான்’ அம்சங்களை மேம்படுத்த உதவும்.
  • புதிய சேவைகளை உருவாக்க: புதிய சேவைகளை உருவாக்க தரவு எங்களுக்கு உதவும். எடுத்துக்காட்டாக, படங்களுக்கான Googleளின் முதல் ஆப்ஸான Picasaவில் தங்கள் படங்களைப் பயனர்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டது Google Photosஸை வடிவமைக்கவும் வெளியிடவும் உதவியது.
  • உள்ளடக்கத்தைப் பிரத்தியேகமாக்க: நீங்கள் விரும்பக்கூடியவற்றைக் காட்ட எங்களுக்கு உதவும். எடுத்துக்காட்டாக, YouTubeல் விளையாட்டு குறித்த வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் எனில் அந்த வகை வீடியோக்களை அதிகமாக நாங்கள் பரிந்துரைக்கக்கூடும்.
  • இதன் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட: நீங்கள் பார்க்கும் தளம், டைப் செய்த தேடல் வினவல்கள், உங்கள் நகரம் மற்றும் மாநிலம்.
  • செயல்திறனை அளவிட: செயல்திறனை அளவிடுவதற்கும் எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் தரவைப் பயன்படுத்துகிறோம்.
  • உங்களைத் தொடர்புகொள்ள: எடுத்துக்காட்டாக, சந்தேகத்திற்குரிய செயல்பாட்டை நாங்கள் கண்டறிந்தால் அது குறித்த அறிவிப்பை அனுப்ப உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்.

Google எதைச் சேமிக்க வேண்டுமென நான் எவ்வாறு முடிவு செய்வது?

நாங்கள் சேகரிக்கும் தரவையும் அவை பயன்படுத்தப்படும் விதத்தையும் அமைப்புகளுக்குச் சென்று நீங்கள் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, உங்கள் 'YouTube செயல்பாடுகளை' உங்கள் Google கணக்கில் சேமிக்க வேண்டாம் எனில் அதை முடக்கிக்கொள்ளலாம். 'செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்' அமைப்பை நீங்கள் மாற்றினால் அதுகுறித்து உங்கள் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும். தனியுரிமை அமைப்புகள் குறித்து மேலும் அறிக

உங்களையும் உங்கள் Google கணக்கையும் பற்றிய தகவல்கள் சிலவற்றை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.

Google எனது தனிப்பட்ட தகவல்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுமா?

சட்டத் தேவைகள் போன்ற குறிப்பிட்ட சூழல்களைத் தவிர Googleளுக்கு வெளியே உள்ள நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் போன்றவர்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிரமாட்டோம். அவ்வாறு பகிர்ந்தால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இவர்களுடனும் இந்தச் சூழல்களிலும் சில தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிரக்கூடும்:

  • Googleளில் உள்ள உங்கள் பெற்றோர் & குடும்பக் குழுவுடன் பகிரலாம்.
  • ​​நீங்களோ உங்கள் பெற்றோரோ எங்களுக்கு அனுமதி அளிக்கும்போது அல்லது சட்டப்பூர்வக் காரணங்களுக்காகப் பகிரலாம். தனிப்பட்ட தகவல்களை Googleளைத் தவிர பிற நிறுவனங்களுக்குப் பகிர்வது அவசியம் என்று நினைக்கும் பின்வரும் சூழல்களில் அவற்றைப் பகிர்வோம்:
  • பொருந்தக்கூடிய சட்டம், ஒழுங்குமுறை, சட்டரீதியான செயல்முறை, அமல்படுத்தக்கூடிய அரசுக் கோரிக்கை போன்றவற்றுக்கு இணங்குதல்.
  • சாத்தியமான மீறல்கள் தொடர்பான விசாரணை உட்பட பொருந்தும் சேவை விதிமுறைகளை அமல்படுத்தல்.
  • மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களைக் கண்டறிதல், தடுத்தல் அல்லது அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தல்.
  • சட்டத்திற்குத் தேவையானபடி அல்லது அனுமதிக்கப்பட்டபடி Google, எங்கள் பயனர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பிற்குத் தீங்கு ஏற்படாதவாறு பாதுகாத்தல்.
  • வெளிப்புறச் செயலாக்கங்களுக்கு. எங்களுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்கள் நாங்கள் வழங்கும் வழிமுறைகளின்படி தரவைச் செயலாக்க, தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வழங்குவோம். எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் சேவைகளில் எங்களுக்கு உதவவும் பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் நிறுவனத்துடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிரவும் வெளிப்புற நிறுவனங்களைப் பயன்படுத்துகிறோம்.

நான் பகிரும் படங்கள், மின்னஞ்சல்கள், ஆவணங்கள் போன்றவற்றை வேறு யாரால் பார்க்க முடியும்?

நீங்கள் பயன்படுத்தும் Google ஆப்ஸிலும் தளங்களிலும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைப் பிறருடன் பகிரலாம்.

நீங்கள் பகிரும் எதையும் Google அல்லாத ஆப்ஸிலும் தளங்களிலும் கூட பிறர் மீண்டும் பகிர்வதற்கு வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்கள் கணக்கில் இருந்து உள்ளடக்கத்தை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நீக்கிக்கொள்ளலாம். அவ்வாறு செய்தாலும், நீங்கள் பகிர்ந்த நகல்கள் நீக்கப்படாது.

என்ன பகிர்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும், நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே பகிரவும்.

இந்தத் தலைப்புகளைப் பற்றி மேலும் அறிய, எப்போது வேண்டுமானாலும் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கலாம்.