உங்கள் சாதனத்தின் இணக்கத்தன்மையைச் சரிபாருங்கள்

சிறுவர்கள் மற்றும் டீன் ஏஜர்களுக்கு

7.0 (Nougat) மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் Android சாதனங்கள் Family Link கண்காணிப்பு அம்சம் இயங்குவதற்கு ஏற்றவையாகும். Android 5.0 மற்றும் 6.0 (Lollipop மற்றும் Marshmallow) பதிப்புகளில் இயங்கும் சாதனங்களிலும் Family Link அமைப்புகளைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு எங்கள் உதவி மையத்தைப் பார்க்கவும்.

பெற்றோருக்கானவை

5.0 (Lollipop) மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் Android சாதனங்களிலும் iOS 11 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் iPhoneகளிலும் பெற்றோரால் Family Linkகை இயக்க முடியும்.

ஒரு சிறுமி தனது தந்தையின் அருகே அமர்ந்து டேப்லெட் திரையைப் பார்ப்பதைக் காட்டும் படம்.
அமைப்புகள்
சிஸ்டம்
தேதி & நேரம்
திட்டமிடப்பட்ட பவர் ஆன் & ஆஃப்
அணுகல்தன்மை
மென்பொருள் புதுப்பிப்பு
பொது நிர்வாகம்
மொபைல் விவரம்

நீங்கள் பயன்படுத்தும் Android பதிப்பைக் கண்டறிதல்

1. உங்களின் Android சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.

2. கீழ்ப்பகுதிக்குச் செல்லவும்.

3. பதிப்பு எண்ணைப் பார்க்க, 'மொபைல் விவரம்' அல்லது 'டேப்லெட் விவரம்' என்பதைத் தட்டவும்.

Chromebookகிலும் Family Link இயங்கும்

உங்கள் பிள்ளை தனது சொந்தக் கணக்கைப் பயன்படுத்தி Chromebookகில் உள்நுழையும்போது அவரது செயல்பாட்டை அறிந்து கொள்ளலாம். Chrome OS பதிப்பு 71 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் Chromebookகுகளில் Family Link கண்காணிப்பு அம்சம் இயங்கும்.

மேலும் அறிக
வெளியே அமர்ந்து Google Chromebook பயன்படுத்துகின்ற பெண்ணைக் காட்டும் படம்.