Jump to Content

பெற்றோர்களை வரவேற்கிறோம்!

உங்கள் நம்பிக்கையைப் பெறுவதையே முக்கியமாகக் கருதுகிறோம். Google கணக்கை வைத்திருக்க உங்கள் பிள்ளையை அனுமதிப்பது என்பது பெரியதொரு முடிவாகும். மேலும் அறிய, நேரம் ஒதுக்கி இந்த முக்கியமான தகவலைப் படிக்கவும்.

பெற்றோருக்கான கருவிகள்

உங்கள் பிள்ளையின் Google கணக்கு உங்கள் சொந்தக் கணக்கைப் போன்றதாகும். பிள்ளைகளுக்காக வடிவமைக்கப்படாத அல்லது உருவாக்கப்படாத சேவைகள் உள்ளிட்ட பல Google தயாரிப்புகளையும் சேவைகளையும் இந்தக் கணக்கின் மூலம் அணுக முடியும். பின்வருபவற்றைப் போன்ற செயல்களைச் செய்ய உங்கள் பிள்ளை தனது கணக்கைப் பயன்படுத்தலாம்:

  • Google Assistant, Chrome, Search ஆகியவற்றைப் பயன்படுத்தி கேள்விகளைக் கேட்பது, இணையத்தை அணுகுவது, இணையத்தில் தேடுவது;
  • Gmail, SMS, வீடியோ, குரல் ஆகியவற்றையும் பிற தகவல்தொடர்பு முறைகளையும் பயன்படுத்தி மற்றவர்களைத் தொடர்புகொள்வது;
  • ஆப்ஸ், கேம்கள், இசை, திரைப்படங்கள் மற்றும் பலவற்றைப் பதிவிறக்குவது, வாங்குவது, பயன்படுத்தி மகிழ்வது;
  • படங்கள், வீடியோக்கள், விளக்கக்காட்சிகள், ஆவணங்கள் ஆகியவற்றையும் பிற உள்ளடக்கத்தையும் உருவாக்குவது, பார்ப்பது, பகிர்வது;
  • செயல்பாட்டின் நிலை, இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல்நிலை & ஃபிட்னஸ் குறித்த தகவலை Google Fitடில் கண்காணிப்பது (உங்கள் பிள்ளையின் சாதனங்களைப் பொறுத்து);
  • Googleளின் சேவைகளைப் பயன்படுத்தும்போது அதற்குப் பொருத்தமான விளம்பரங்களைப் பார்ப்பது.

பிறருக்கு மதிப்பளியுங்கள்

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் பிற பயனர்களுடன் உங்கள் பிள்ளை தொடர்புகொள்வதை எங்களின் பெரும்பாலான சேவைகள் அனுமதிக்கின்றன. அனைவருக்கும் ஏற்ற மரியாதைக்குரிய ஒரு சூழலாகப் பராமரிக்க விரும்புகிறோம். அதாவது எங்களின் சேவைகளைப் பயன்படுத்தும்போது, தவறாக வழிநடத்துதல், ஏமாற்றுதல், அவதூறு செய்தல், மிரட்டுதல், உபத்திரவமளித்தல், பிறரை அச்சுறுத்துதல் அல்லது வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தை (எ.கா. மக்களின் பிறப்பு, இனம், மதம், பாலினம், பாலியல் நாட்டம் போன்றவற்றின் அடிப்படையில் வெறுப்பையோ பாகுபாட்டையோ தூண்டும் உள்ளடக்கம்) பொதுவில் வெளியிடுதல் போன்ற செயல்களின் மூலம் தவறாக நடந்து கொள்ளவோ தனக்குத் தானே அல்லது பிறருக்குத் தீங்கிழைக்கவோ கூடாது (அல்லது அச்சுறுத்தவோ இத்தகைய தவறான பயன்பாடு அல்லது தீங்கிழைக்கும் செயல்களை ஊக்குவிக்கவோ கூடாது) என்பது போன்ற அடிப்படை நடத்தை விதிகளை உங்கள் பிள்ளை அவசியம் பின்பற்ற வேண்டும். வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தை வெளியிடுவது உங்களையும் உங்கள் பிள்ளையையும் சிவில் அல்லது குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்கும் சூழலுக்கு உட்படுத்தலாம்.

உங்கள் பிள்ளையின் தனியுரிமை

உங்கள் பிள்ளை ஒரு Google கணக்கு/சுயவிவரத்தை வைத்திருக்கும் பொருட்டு இந்தத் தனியுரிமை அறிக்கையிலுமGoogle தனியுரிமைக் கொள்கையிலும் விவரித்துள்ளவாறு உங்கள் பிள்ளையின் தகவல்களைச் சேகரிக்கவோ பயன்படுத்தவோ வெளியிடவோ உங்கள் அனுமதி எங்களுக்குத் தேவைப்படலாம். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு உங்கள் பிள்ளையை நீங்கள் அனுமதிக்கும்போது நீங்களும் உங்கள் பிள்ளையும் உங்கள் தகவல்களை வழங்குவதில் எங்களை நம்புகிறீர்கள். இது மிகப்பெரிய பொறுப்பு என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். உங்கள் தகவல்களைப் பாதுகாக்கவும் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை உங்களுக்கு அளிக்கவும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். நீங்களஉங்கள் பிள்ளை தனது செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கலாமா என்பதைத் தேர்வுசெய்யலாம் (இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு, YouTube வரலாறு போன்றவை).

இந்த Family Link நிர்வகிக்கும், 13 வயதிற்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட) பிள்ளைகளுக்கான Google கணக்குகள் & சுயவிவரங்களுக்கான தனியுரிமை அறிக்கை, Google தனியுரிமைக் கொள்கை ஆகியவை Googleளின் தனியுரிமை நடைமுறைகளை விவரிக்கின்றன. பிரத்தியேகமாக்கிய விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்டவை போன்று உங்கள் பிள்ளையின் கணக்கு அல்லது சுயவிவரத்திற்குரிய தனியுரிமை நடைமுறைகள் இருக்கும் அளவுக்கு இந்தத் தனியுரிமை அறிக்கையில் அந்த வித்தியாசங்கள் விளக்கப்பட்டுள்ளன.

உங்கள் பிள்ளை பயன்படுத்தக்கூடிய மூன்றாம் தரப்பு (Google அல்லாதது) ஆப்ஸ், செயல்பாடுகள், இணையதளங்கள் போன்றவற்றின் நடைமுறைகளுக்கு இந்தத் தனியுரிமை அறிக்கைப் பொருந்தாது. மூன்றாம் தரப்பு ஆப்ஸ், செயல்பாடுகள், தளங்கள் ஆகியவற்றிற்குப் பொருந்தும் விதிமுறைகளும் கொள்கைகளும் (தரவைச் சேகரித்தல் & பயன்படுத்தல் நடைமுறைகள் உட்பட) உங்கள் பிள்ளைக்கு ஏற்றவையா எனத் தீர்மானிக்க, அவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

Google கணக்கு/சுயவிவரத்தை வைத்துக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு நீங்கள் அனுமதியளித்ததும் பொதுவாக உங்கள் கணக்கைப் போலவே அவரது கணக்கு/சுயவிவரத்தையும் கையாண்டு தகவல்களைச் சேகரிப்போம். எடுத்துக்காட்டாக, நாங்கள் இவற்றைச் சேகரிப்போம்:

நீங்களும் உங்கள் பிள்ளையும் உருவாக்கும் அல்லது எங்களுக்கு வழங்கும் தகவல்கள்.
கணக்கு/சுயவிவரத்தை உருவாக்கும் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக, பெயரின் முற்பகுதி & பிற்பகுதி, மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்கலாம். நீங்களோ உங்கள் பிள்ளையோ வழங்கும் தகவல்களைச் சேகரிப்போம் (எ.கா: ஒப்புதல் கோருவதற்காக உங்களைத் தொடர்புகொள்வதற்கு அவசியமான உங்கள் ஆன்லைன் தொடர்புத் தகவல்). உங்கள் பிள்ளை தனது கணக்கு/சுயவிரத்தைப் பயன்படுத்தும்போது (எ.கா. Google Photosஸில் படத்தைச் சேமிக்கும்போதோ Google Driveவில் ஆவணத்தை உருவாக்கும்போதோ) உருவாக்கும், பதிவேற்றும் அல்லது பிறரிடமிருந்து பெறும் தகவல்களையும் சேகரிப்போம்.

எங்கள் சேவைகளை உங்கள் பிள்ளை பயன்படுத்தும் போது நாங்கள் சேகரிக்கும் தகவல்.
உங்கள் பிள்ளை பயன்படுத்தும் சேவைகளைப் பற்றியும் அவற்றை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் (Google Searchசில் வினவலை உள்ளிடுவது, Google Assistantடுடன் பேசுவது அல்லது YouTube Kidsஸில் வீடியோ பார்ப்பது) என்பதைப் பற்றியும் குறிப்பிட்ட தகவலை நாங்கள் தானாகச் சேகரிப்போம், சேமிப்போம். இந்தத் தகவலில் அடங்குபவை:

  • உங்கள் பிள்ளையின் ஆப்ஸ், உலாவிகள் மற்றும் சாதனங்கள
    Google சேவைகளை அணுகுவதற்கு உங்கள் பிள்ளை பயன்படுத்தும் ஆப்ஸ், உலாவிகள் மற்றும் சாதனங்களின் தனித்துவமான அடையாளங்காட்டிகள், உலாவி வகை மற்றும் அமைப்புகள், சாதனத்தின் வகை மற்றும் அமைப்புகள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்ட தகவல்களையும், அதோடு மொபைல் நிறுவனம், மொபைல் எண் உள்ளிட்ட மொபைல் நெட்வொர்க் தகவல்கள் மற்றும் ஆப்ஸ் பதிப்பு எண் ஆகியவற்றையும் சேகரிக்கிறோம். உங்கள் பிள்ளையின் ஆப்ஸ், உலாவிகள் மற்றும் சாதனங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது அவற்றின் செயல்பாடுகளைப் பற்றிய தகவலையும் நாங்கள் சேகரிப்போம். IP முகவரி, சிதைவு அறிக்கைகள், சிஸ்டம் செயல்பாடு, தேதி மற்றும் நேரம், மற்றும் பிள்ளை சமர்ப்பித்த கோரிக்கையின் ரெஃபரர் URL ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். எடுத்துக்காட்டாக, Play Storeரில் இருந்து ஆப்ஸைப் பதிவிறக்கி நிறுவுதல் போன்ற செயல்களைச் செய்யும்போது, உங்கள் பிள்ளையின் சாதனத்தில் இருக்கும் Google சேவை ஒன்று எங்கள் சேவையகங்களைத் தொடர்புகொண்டால், நாங்கள் இந்தத் தகவல்களைச் சேகரிக்கலாம்.
  • உங்கள் பிள்ளையின் செயல்பாடு
    எங்கள் சேவைகளில் உங்கள் பிள்ளை மேற்கொள்ளும் செயல்பாடு குறித்த தகவல்களைச் சேகரிப்போம். அவர்கள் விரும்பக்கூடிய ஆப்ஸை Google Playயில் பரிந்துரைப்பது போன்றவற்றைச் செய்ய அவற்றைப் பயன்படுத்துவோம். உங்கள் பிள்ளை அவர்களின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கலாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். நாங்கள் சேகரிக்கும் உங்கள் பிள்ளையின் செயல்பாட்டுத் தகவல்களில், தேடல் வார்த்தைகள், அவர்கள் பார்க்கும் வீடியோக்கள், ஆடியோ அம்சங்களை அவர்கள் பயன்படுத்தும்போது குரல் மற்றும் ஆடியோ தகவல், அவர்கள் தொடர்புகொள்ளும் அல்லது உள்ளடக்கத்தைப் பகிரும் நபர்கள் மற்றும் அவர்களுடைய Google கணக்கில் ஒத்திசைத்த Chrome உலாவி வரலாறு போன்றவை அடங்கியிருக்கலாம். அழைப்புகளைச் செய்வது, பெறுவது அல்லது மெசேஜ்களை அனுப்புவது, பெறுவது போன்றவற்றுக்கு உங்கள் பிள்ளை Google Meet, Duo போன்ற எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால் தொலைபேசி சார்ந்த பதிவுத் தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். உங்கள் பிள்ளை தனது Google கணக்கிற்குச் சென்று கணக்கு அல்லது சுயவிவரத்தில் சேமித்துள்ள செயல்பாட்டுத் தகவல்களைக் கண்டறியலாம் நிர்வகிக்கலாம். அத்துடன், உங்கள் பிள்ளை தனது Google கணக்கில் உள்நுழைந்தோ Family Linkகில் தனது சுயவிவரத்தை அணுகியோ செயல்பாட்டுத் தகவலை நிர்வகிக்க உதவலாம்.
  • உங்கள் பிள்ளையின் இருப்பிடத் தகவல்கள
    எங்கள் சேவைகளை உங்கள் பிள்ளை பயன்படுத்தும் போது அவரின் இருப்பிடத் தகவல்களைச் சேகரிக்கிறோம். GPS, IP முகவரி, அவரது சாதனத்தில் உள்ள சென்சார் தரவு, அவரது சாதனத்திற்கு அருகிலுள்ளவற்றை (வைஃபை ஆக்சஸ் பாயிண்ட்ஸ், செல் டவர்கள், புளூடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் போன்றவை) பற்றிய தகவல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் பிள்ளையின் இருப்பிடம் தீர்மானிக்கப்படலாம். நாங்கள் சேகரிக்கும் இருப்பிடத் தரவின் வகைகள் என்பது உங்கள் அமைப்புகளையும் உங்கள் பிள்ளையின் சாதனங்களையும் பொறுத்தது.
  • உங்கள் பிள்ளையின் குரல் மற்றும் ஆடியோ தகவல்கள
    உங்கள் பிள்ளையின் குரல் மற்றும் ஆடியோ தகவல்களை நாங்கள் சேகரிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, உங்கள் பிள்ளை ஆடியோ இயக்கக் கட்டளைகளை (எ.கா. “OK, Google” எனக் கூறுவது அல்லது மைக்ரோஃபோன் ஐகானைத் தொடுவது) பயன்படுத்தும் போது, கட்டளைகளுக்கு அடுத்து வரும் பேச்சு/ஆடியோ, அதற்கு முந்தைய சில வினாடிகள், குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு அமைப்பு இயக்கத்தில் இருக்கும் போது, உங்கள் பிள்ளையின் உள்நுழைந்த சாதனங்களிலிருந்து அவரது கணக்கில் சேமிக்கப்படும்

உங்கள் பிள்ளையின் தகவலைச் சேகரிப்பதற்கும் சேமித்து வைப்பதற்கும் நாங்கள் குக்கீகள், பிக்சல் டேக்ஸ், உலாவி இணையச் சேமிப்பகம் அல்லது ஆப்ஸ் தரவுத் தற்காலிகச் சேமிப்புகள் போன்ற சாதன சேமிப்பகம், தரவுத்தளங்கள், சேவையகப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம். இந்தக் கணக்குகள்/சுயவிவரங்களுக்குக் கிடைக்கும் Google தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்துவதற்கு நியாயமாகத் தேவைப்படும் தகவல் தவிர வேறு கூடுதல் தனிப்பட்ட தகவலை உங்கள் பிள்ளை வழங்க வேண்டிய அவசியமில்லை.

சேகரிக்கும் தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்

Google சேகரிக்கும் உங்கள் பிள்ளையின் Google கணக்கு/சுயவிவரத்துடன் தொடர்புடைய தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தக்கூடும் என்பதை Googleளின் தனியுரிமைக் கொள்கை மிகவும் விரிவாக விளக்குகிறது. பொதுவாக, உங்கள் பிள்ளையின் தகவல்களை இவற்றுக்கெல்லாம் பயன்படுத்துவோம்: எங்கள் சேவைகளை வழங்குதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்; புதிய சேவைகளை உருவாக்குதல்; உங்கள் பிள்ளைக்காக எங்கள் சேவைகளைப் பிரத்தியேகமாக்குதல்; எங்கள் சேவைகளின் செயல்திறனை அளவிடுவதுடன் அவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ளுதல்; எங்கள் சேவைகள் தொடர்பாக உங்கள் பிள்ளையை நேரடியாகத் தொடர்புகொள்ளுதல்; எங்கள் சேவைகளின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்த உதவுதல்.

இந்தக் காரணங்களுக்காக உங்கள் பிள்ளையின் தகவல்களைச் செயல்படுத்துவதற்குப் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். பிரத்தியேகமான தேடல் முடிவுகள் அல்லது உங்கள் பிள்ளை எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பிற அம்சங்கள் போன்றவற்றைப் பிள்ளைக்கு வழங்குவதற்காக அவரின் உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்ய தானியங்கு அமைப்புகளைப் பயன்படுத்துகிறோம். அத்துடன் ஸ்பேம், மால்வேர், சட்டவிரோத உள்ளடக்கம் போன்ற தவறான பயன்பாட்டைக் கண்டறிவதில் எங்களுக்கு உதவ, உங்கள் பிள்ளையின் உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்வோம். தரவில் உள்ள வடிவமைப்புகளை அடையாளங்காண, அல்காரிதங்களையும் பயன்படுத்துவோம். ஸ்பேம், மால்வேர், சட்டவிரோத உள்ளடக்கம் மற்றும் எங்கள் கொள்கைகளை மீறும் வகையில் உள்ள பிற தவறான பயன்பாட்டை எங்கள் சிஸ்டங்களில் கண்டறிந்தால், நாங்கள் அவரது கணக்கு/சுயவிவரத்தை முடக்கக்கூடும் அல்லது தகுந்த பிற நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும். சில சூழல்களில் விதிமீறல் குறித்து உரிய அதிகாரிகளிடமும் நாங்கள் புகாரளிக்கக்கூடும்.

பரிந்துரைகள், பிரத்தியேகமாக்கிய உள்ளடக்கம், பிரத்தியேகமாக்கிய தேடல் முடிவுகள் ஆகியவற்றை வழங்க உங்கள் பிள்ளையின் தகவலை நாங்கள் பயன்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக உங்கள் பிள்ளையின் அமைப்புகளின் அடிப்படையில் உங்கள் பிள்ளை விரும்பக்கூடிய புதிய ஆப்ஸைப் பரிந்துரைக்க அவர் நிறுவியுள்ள ஆப்ஸ் போன்ற தகவலை Google Play பயன்படுத்தக்கூடும்.

அத்துடன், மேலே விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக எங்கள் சேவைகள் மற்றும் உங்கள் பிள்ளையின் சாதனங்கள் அனைத்திலும் நாங்கள் சேகரிக்கும் தகவல்களை நாங்கள் ஒன்றிணைக்கலாம். உங்கள் பிள்ளையின் கணக்கு/சுயவிவர அமைப்புகளின் அடிப்படையில் Googleளின் சேவைகளை மேம்படுத்துவதற்காக, பிற தளங்களிலும் ஆப்ஸிலும் அவர் மேற்கொள்ளும் செயல்பாடானது அவரது தனிப்பட்ட தகவலுடன் தொடர்புபடுத்தப்படக்கூடும்.

பிரத்தியேகமாக்கிய விளம்பரங்களை உங்கள் பிள்ளைக்கு Google காட்டாது. அதாவது உங்கள் பிள்ளையின் கணக்கு/சுயவிவரத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் விளம்பரங்கள் காட்டப்படாது. அதற்குப் பதிலாக, உங்கள் பிள்ளை பயன்படுத்தும் இணையதளம்/ஆப்ஸின் உள்ளடக்கம், தற்போதைய தேடல் வினவல், பொது இடம் (நகரம், மாநிலம் போன்றவை) போன்ற தகவல்களின் அடிப்படையில் விளம்பரங்கள் இருக்கலாம். இணையத்தில் உலாவும்போதோ Google அல்லாத ஆப்ஸைப் பயன்படுத்தும்போதோ உங்கள் பிள்ளை மூன்றாம் தரப்பினர் வழங்கும் பிரத்தியேகமாக்கிய விளம்பரங்கள் உட்பட பிற (Google அல்லாத) விளம்பர வழங்குநர்கள் வழங்கும் விளம்பரங்களைப் பார்க்கக்கூடும்.

உங்கள் பிள்ளை பகிரக்கூடிய தகவல்

உங்கள் பிள்ளை அவரது Google கணக்கிலோ சுயவிவரத்திலோ உள்நுழையும் போது படங்கள், வீடியோக்கள், ஆடியோ, இருப்பிடம் ஆகிய தகவல்களைப் பொதுவிலும் மற்றவர்களுடனும் பகிர முடியலாம். உங்கள் பிள்ளை பொதுவில் தகவல்களைப் பகிரும்போது Google Search போன்ற தேடல் இன்ஜின்களில் அவற்றை அணுக முடியும்.

Google பகிரும் தகவல்கள்

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நாங்கள் சேகரிக்கும் தகவல் Googleளுக்கு வெளியே பகிரப்படலாம். பின்வரும் சூழ்நிலைகளைத் தவிர்த்து, Googleளைச் சாராத நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் தனிப்பட்ட தகவலைப் பகிரமாட்டோம்:

ஒப்புதலுடன்
Googleளைச் சாராத நிறுவனங்களுடன் தனிப்பட்ட தகவலை ஒப்புதலுடன் (பொருந்தினால்) பகிர்வோம்.

உங்கள் குடும்பக் குழுவுடன்
உங்கள் பிள்ளையின் பெயர், படம், மின்னஞ்சல் முகவரி மற்றும் Playயில் வாங்குபவை உட்பட உங்களின் பிள்ளையின் தகவல் Googleளில் உள்ள உங்கள் குடும்பக் குழுவில் உள்ளவர்களுடன் பகிரப்படலாம்.

வெளிப்புறச் செயலாக்கத்திற்கு
தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்காக எங்கள் இணை நிறுவனங்களுக்கோ பிற நம்பகமான வணிகங்கள்/நபர்களுக்கோ அந்தத் தனிப்பட்ட தகவலை வழங்குவோம். அவர்கள் எங்கள் வழிமுறைகளின்படியும் இந்தத் தனியுரிமை அறிக்கை, Google தனியுரிமைக் கொள்கை, பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் ரகசியத்தன்மை & பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்கும் வகையிலும் அவற்றைச் செயலாக்குவார்கள்.

சட்டபூர்வக் காரணங்களுக்கு
பின்வரும் காரணங்களுக்காகத் தகவல்களை அணுகுதல், பயன்படுத்துதல், பாதுகாத்தல், வெளியிடுதல் போன்றவை உண்மையாகவே அவசியமானது என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் தனிப்பட்ட தகவலை நாங்கள் Googleளைச் சாராத நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் பகிர்வோம்:

  • பொருந்தும் சட்டம், கட்டுப்பாடு, சட்டச் செயலாக்கம் அல்லது பின்பற்ற வேண்டிய அரசுக் கோரிக்கையுடன் இணங்குதல்.
  • சாத்தியமுள்ள மீறுதல்களை விசாரிப்பது உள்பட, பொருந்தும் சேவை விதிமுறைகளைச் செயலாக்குதல்.
  • மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களைக் கண்டறிதல், தடுத்தல் அல்லது அவை குறித்து நடவடிக்கை எடுத்தல்; அல்லது
  • சட்டத்தால் கோரப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்டதுபோல், Google, எங்கள் பயனர்கள் அல்லது பொதுமக்களின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பிற்குத் தீங்கு ஏற்படாமல் பாதுகாத்தல்.

தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காண முடியாத தகவலை (எங்கள் சேவைகளின் பொது உபயோகம் குறித்த போக்குகள் போன்றவை) பொதுவிலும், வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள், டெவெலப்பர்கள் அல்லது உரிமைகளைக் கொண்டவர்கள் போன்ற எங்கள் கூட்டாளர்களுடனும் நாங்கள் பகிரக்கூடும். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளின் பொதுவான பயன்பாடு பற்றிய போக்குகளைக் காண்பிப்பதற்காகத் தகவலை பொதுவில் பகிர்வோம். தங்கள் சொந்த குக்கீகள் அல்லது அதைப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விளம்பரம் மற்றும் அளவீட்டு நோக்கங்களுக்காக, உலாவிகள் அல்லது சாதனங்களிலிருந்து தகவலைச் சேகரிக்க, குறிப்பிட்ட கூட்டாளர்களையும் அனுமதிப்போம்.

உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தகவலுக்கான அணுகல்

உங்கள் பிள்ளையிடம் Google கணக்கு இருந்தால், நீங்கள் அதில் உள்நுழைவதன் மூலம் உங்கள் பிள்ளையின் தகவல்களின் செயலாக்கத்தை அணுகலாம் மாற்றலாம் அகற்றலாம் பதிவிறக்கலாம் கட்டுப்படுத்தலாம். உங்கள் பிள்ளையின் கடவுச்சொல்லை நீங்கள் மறந்துவிட்டால், Family Link ஆப்ஸ் மூலமஇணையத்தின் வழியாக Family Link அமைப்புகள் மூலமோ கடவுச்சொல்லை மீட்டமைக்கலாம். உள்நுழைந்ததும், Google தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை (Google செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் போன்றவை) பயன்படுத்தி உங்கள் பிள்ளையின் தனியுரிமை அமைப்புகளையும் தகவல்களையும் நிர்வகிக்கலாம்.

உங்கள் பிள்ளையிடம் சுயவிவரம் இருந்தால், Family Link ஆப்ஸ் மூலமஇணையத்தின் வழியாக Family Link அமைப்புகள் மூலமோ உங்கள் பிள்ளையின் தகவல்களின் செயலாக்கத்தை நீங்கள் அணுகலாம் மாற்றலாம் அகற்றலாம் பதிவிறக்கலாம் கட்டுப்படுத்தலாம்.

உங்கள் பிள்ளை “எனது செயல்பாடு” என்பதில் அவரது கடந்தகாலச் செயல்பாட்டை நீக்கவும் இயல்பாக ஆப்ஸ் அனுமதிகளை (சாதன இருப்பிடம், மைக்ரோஃபோன், தொடர்புகள் போன்றவை அடங்கும்) மூன்றாம் தரப்பினருக்கு வழங்கவும் முடியும். உங்களது பிள்ளையின் Google கணக்கு/சுயவிவரத் தகவல்களைத் திருத்துதல்/மாற்றுதல், ஆப்ஸ் உபயோகத்தையும் ஆப்ஸ் அனுமதிகளையும் மதிப்பாய்வு செய்தல், உங்கள் பிள்ளையின் தகவல்களை அணுகுவதற்காக ஆப்ஸுக்கோ மூன்றாம் தரப்புச் சேவைகளுக்கோ குறிப்பிட்ட அனுமதிகளை அளிக்கும் உங்கள் பிள்ளையின் ஆற்றலை நிர்வகித்தல் ஆகிய செயல்களுக்கும் நீங்கள் Family Linkகைப் பயன்படுத்த முடியும்.

உங்கள் பிள்ளையின் தகவலைச் சேகரிப்பதையோ பயன்படுத்துவதையோ எப்போது வேண்டுமானாலும் நிறுத்த விரும்பினால், Family Link ஆப்ஸில் உங்கள் பிள்ளையின் கணக்கு/சுயவிவரத் தகவல் பக்கத்திலஇணையத்தின் வழியாக Family Link அமைப்புகளிலோ உள்ள "கணக்கை நீக்கு" அல்லது "சுயவிவரத்தை நீக்கு" என்பதைக் கிளிக் செய்து உங்கள் பிள்ளையின் Google கணக்கு/சுயவிவரத்தை நீக்கலாம். தகுந்த கால அளவிற்குள் உங்கள் பிள்ளையின் கணக்குத் தகவல் நிரந்தரமாக நீக்கப்படும்.

எங்களைத் தொடர்புகொள்க

உங்கள் பிள்ளையின் Google கணக்கு/சுயவிவரம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளத் தயங்காதீர்கள். உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். Family Link மற்றும் உங்கள் பிள்ளையின் Google கணக்கு/சுயவிவரம் குறித்த கூடுதல் தகவல்களை எங்களஉதவி மையத்தில் பார்க்கலாம். Family Link ஆப்ஸில் 'மெனு' ☰ > உதவி & கருத்து > 'கருத்தை அனுப்பு' என்பதைத் தட்டுவதன் மூலமமின்னஞ்சல் வழியாக எங்களைத் தொடர்புகொள்வதன் மூலமோ கீழே உள்ள முகவரியிலோ Family Link, உங்கள் பிள்ளையின் Google கணக்கு/சுயவிவரம் குறித்த கருத்தை எங்களுக்கு அனுப்பலாம்.

Google
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043 USA
ஃபோன்: +1 855 696 1131 (USA)
மற்ற நாடுகளுக்கg.co/FamilyLink/Contact தளத்திற்குச் செல்லவும்

உங்கள் பிள்ளையின் தரவை Google எப்படிச் சேகரித்துப் பயன்படுத்துகிறது என்பது குறித்துக் கேள்விகள் இருந்தால், Google மற்றும் எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலகத்தை நீங்கள் தொடர்புகொள்ளலாம். உள்ளூர் சட்டத்திற்குட்பட்ட உங்கள் உரிமைகள் குறித்துச் சந்தேகங்கள் இருந்தால் உள்ளூர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தையும் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

13 வயதிற்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட) பிள்ளைகளுக்கான Family Link வெளியீட்டைப் பார்க்கவும்