Jump to Content

குடும்பக் குழு மூலம் உங்கள் குடும்பத்தினருடன் இணைந்திருங்கள்

நீங்கள் விரும்பும் தயாரிப்புகளை உங்களுக்கு விருப்பமானவர்களுடன் பகிரலாம். அடிப்படை டிஜிட்டல் விதிகளை அமைக்கலாம், உங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்கலாம், Google முழுவதிலும் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சந்தாக்களில் இருந்து அதிகப் பலன்களைப் பெறலாம்.
பன்முகத்தன்மை கொண்ட குடும்பக் குழுவைக் காட்டும் விளக்கப்படம்

இதை எளிதாகத் தொடங்கலாம்

குடும்பக் குழுவைப் பற்றி ஒரு குடும்ப நிர்வாகியின் கருத்து
6 உறுப்பினர்கள் வரை கொண்ட குடும்பக் குழுவை எளிதாக உருவாக்குங்கள். உங்களுக்கு விருப்பமானவர்களை அழைத்து, Google முழுவதிலும் எவற்றையெல்லாம் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்.

குடும்பக் குழு மூலம் Googleளில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுங்கள்

Calendarரில் பகிரப்பட்டுள்ள திட்ட அட்டவணையின் காட்சி

திட்டமிட்டுள்ள அனைத்தையும் உங்கள் குடும்பத்தினர் செய்யும்படி கண்காணிப்பில் வைத்திருங்கள்

அனைத்து நிகழ்வுகளையும் திட்ட அட்டவணையில் சேர்த்து அனைவரையும் கண்காணிப்பில் வைத்திருங்கள். 
குடும்பக் கேலெண்டர்கள், குறிப்புகள், ஷாப்பிங் பட்டியல்கள் ஆகியவற்றின் மூலம் வார நாட்களை எளிதாக நிர்வகியுங்கள்.

Google Playயில் உள்ள குடும்ப லைப்ரரியில் இருக்கும் பகிரப்பட்ட பர்ச்சேஸ்கள்

குடும்பத்தினர் அனைவரும் வாங்கலாம் மற்றும் பகிரலாம்

புத்தகங்கள், ஆப்ஸ், சேமிப்பகம் மற்றும் பலவற்றை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ள, Google தயாரிப்புகளுக்கும் சந்தாக்களுக்கும் ஒரு குடும்பமாகப் பதிவுசெய்யுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குடும்பக் குழு எவ்வாறு செயல்படுகிறது?

நீங்கள் குடும்பக் குழுவை உருவாக்கும்போது அந்தக் குழுவின் நிர்வாகியாகிவிடுவீர்கள். அதாவது, குழுவில் சேர 5 பேர் வரை நீங்கள் அழைக்கலாம். அவர்கள் அழைப்பை ஏற்றால் உங்கள் குடும்பக் குழுவில் சேர்க்கப்படுவார்கள். குடும்ப நிர்வாகிகள் எப்போது வேண்டுமானாலும் குழுவை நீக்கலாம், உறுப்பினர்களை அழைக்கலாம் அகற்றலாம். இப்போதே உங்கள் குடும்பக் குழுவை உருவாக்குவதன் மூலம் தொடங்குங்கள்.

குடும்பக் குழுவின் விலை என்ன?

குடும்பக் குழுவை உருவாக்கவோ அதில் சேரவோ கட்டண மெம்பர்ஷிப்போ சந்தாவோ தேவையில்லை. நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் Google தயாரிப்புகளில் இருந்து அதிகப் பலன்களைப் பெற, குடும்பக் குழு உங்களையும் அதன் உறுப்பினர்களையும் அனுமதிக்கிறது. சில Google தயாரிப்புகளில் பிரீமியம் சேவைகளைப் பெற, குடும்பத் திட்டச் சந்தாக்களை வாங்க வேண்டும்.

குடும்பக் குழுவில் என்ன பகிர முடியும்?

குடும்பக் குழுவை உருவாக்கியதும் Google ஆப்ஸ் மற்றும் சேவைகளின் பட்டியலைப் பார்ப்பீர்கள். குடும்பத்தில் பகிர்வதற்கான ஆப்ஸையும் சேவைகளையும் அதிலிருந்து குடும்ப நிர்வாகி தேர்வுசெய்யலாம்.

எனது குடும்பக் குழுவில் சிறுவர்கள் உள்ளனர். அவர்கள் எப்படிக் கண்காணிக்கப்படுவார்கள்?

குடும்பக் குழுவிலுள்ள கண்காணிக்கப்படும் கணக்குகளுக்கான பெற்றோர் கட்டுப்பாடுகளைக் குடும்ப நிர்வாகிகள் நிர்வகிக்கலாம். கண்காணிக்கப்படும் கணக்கை நிர்வகிப்பதற்கு உதவ, மற்றொரு பெற்றோருக்கும் பெற்றோர் உரிமைகளைக் குடும்ப நிர்வாகி வழங்கலாம்.

ஏதேனும் கட்டுப்பாடுகளோ தேவைகளோ உள்ளனவா?

குடும்பக் குழுவை உருவாக்க, நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக (அல்லது உங்கள் நாட்டில் ஒப்புதல் அளிப்பதற்கான வயதுடையவராக) இருக்க வேண்டும். உங்கள் குடும்பக் குழுவில் சேர, நீங்கள் அழைப்பவர்களிடம் Google கணக்கு இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு குடும்பக் குழுவில் மட்டுமே உறுப்பினர்கள் சேர முடியும். அவர்களால் 12 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மற்றொரு குடும்பக் குழுவிற்கு மாற முடியும்.

குடும்பக் குழுவுக்கும் Family Link ஆப்ஸுக்கும் தொடர்பு உள்ளதா?

குடும்பக் குழுவும் Family Link ஆப்ஸும் வெவ்வேறு சேவைகள் ஆகும். ஆனால் ஒன்றாகச் செயல்படக்கூடியவை. YouTube, Google Play குடும்ப லைப்ரரி, Google Assistant போன்ற உங்களுக்குப் பிடித்த பல ஆப்ஸையும் சேவைகளையும் குடும்பக் குழு மூலம் பகிர முடியும்.

உங்கள் குடும்பக் குழுவில் பிள்ளைக்கான கணக்கை உருவாக்கும்போதுதான் Family Link பங்களிக்கிறது. உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துதல், ஆப்ஸ் பதிவிறக்கங்களையும் பர்ச்சேஸ்களையும் அனுமதித்தல், பயன்படுத்தும் நேரத்தை அமைத்தல் போன்ற டிஜிட்டல் உபயோகத்திற்கான அடிப்படை விதிகளை உங்கள் பிள்ளையின் கணக்கில் அமைக்க Family Link அனுமதிக்கிறது. Family Link குறித்து மேலும் அறிக.

இது பற்றி மேலும் அறிவது எப்படி?

குடும்பக் குழு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் நீங்களும் உங்கள் குடும்பமும் எவற்றைப் பகிரலாம் என்பதையும் பிற விவரங்களையும் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு Google for Families உதவி மையத்திற்குச் செல்லுங்கள்.

சில தயாரிப்புகள்/அம்சங்கள் சில பகுதிகளில் கிடைக்காமல் போகலாம்.